:

சாதித்து காட்டிய மலைவாழ் பெண் ஸ்ரீபதி!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

          23 வயதில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிவில் நீதிபதியாகி சாதனை படைத்துள்ளார். யார் இவர் எப்படி சாதித்தார், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி சட்டப் படிப்பை முடித்து, திருமணமும் ஆகி பிரசவ தேதியையும் அறிவித்த பின், அதே நாளில் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே குழந்தை பிறந்து விட, தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்ற நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பரமு என்பவரின் காரில் மிகவும் பாதுகாப்பாக சென்னைக்கு சென்று தேர்வு எழுதினார் ஸ்ரீபதி. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மன வலிமையுடனும், துணிச்சலுடனும் சென்னைக்குச் சென்று தேர்வு எழுதி தனது 23 வயதில் பெண் சிவில் நீதிபதியாக சாதித்துக் காட்டியுள்ளார்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *