:

பாஜகவில் விஜயதரணி!!!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

விளவங்கோட தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதரணி கடந்த சில காலமாகவே காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.  கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி MP எச். வசந்தகுமார்  காலமானதை அடுத்து அந்த தொகுதியில்  போட்டியிட காங்கிரஸில் வாய்ப்பு கேட்டார். ஆனால் கட்சித் தலைமை வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்தது . அடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டி அவர் தலைமையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த பதவியையும் ராஜேஷ்குமாருக்கு வழங்கப்ட்டது.  மேலும் வரும் லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் விஜய்வசந்த்துக்கே வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதால் ஏமாற்றம் அடைந்த விஜயதரணியை பாஜக தரப்பு  லோக்சபா தேர்தலில் சீட் வழங்குவதாக உறுதி அளித்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள பாஜக   தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கட்சியில் விஜயதரணி இணைந்துள்ளார்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *