:

இந்தியாவை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகம்.

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

          இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் நிறுவ உள்ளது. அதற்கு அடிக்கல் நாட்ட  வருகை தந்த பிரதமர் மோடி அவர்கள் பேசுகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சிக்கு இணையாக கொண்டு செல்வதே என் நோக்கம் என்று கூறினார். அதற்கு அர்த்தம் தமிழ்நாடு வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதாக கருதப்படுகிறது.

          இதற்கு பதிலடி கொடுத்த பி டி ஆர் அவர்கள் உண்மையான GDP வளர்ச்சியுடன் (RBI இன் புள்ளிவிவரங்கள்) ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் CAGR 4.43%. ஆனால் தமிழ்நாடு 5.54% என்ற NSDP வளர்ச்சியை பெற்றுள்ளது. 2024 நிதியாண்டிற்கு இன்னும் ஒரு மாதம் மீதமுள்ளதால், மார்ச் 31, 2023 இல் முடிவடையும் 10 ஆண்டு காலத்திற்கான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) ஆகும் இது. இதில் தமிழ்நாடு தேசிய அளவிலான வளர்ச்சியை விட சிறப்பாகவே உள்ளது இந்திய சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2011-2012 ரூபாய் அடிப்படை) குறைந்தபட்சம் 1.3 மடங்கு முதல் 1.44 மடங்கு வரை நாம் இந்திய தேசிய அளவை அதிகம் முன்னேறி உள்ளோம். 

          முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய அரசு முதலில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும். மத்திய அரசு நியமித்த ஆளுனர் அரசின் மசோதாக்களில் கையெழுத்து போடட்டும். அதன்பின் தமிழ்நாடு வளர்ச்சி பற்றி பேசுங்கள் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.









https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *