தமிழகத்தில் திமுக இருக்காது!

- Reporter 12
- 01 Mar, 2024
அண்ணாமலை பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பல்லடம் வந்த மோடி பேசுகையில் திமுகவை கடுமையாக விமர்சித்து தமிழகத்தில் திமுக இருக்காது என்றும், அண்ணாமலை வந்து விட்டதால் இனி திமுக காணாமல் போய்விடும் என்றும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி கூறுகையில் வட மாநிலங்களில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்த மோடி, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு பைசா கூட ஒதுக்காமல் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தவர். இவர் திமுகவை அழித்து விடுவதாகவும் காணாமல் போய்விடும் என்றும் கூறுகிறார். திரு மோடி அவர்களே நீங்கள் இல்லை உங்கள் தாத்தா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது எனக் கூறினார்.
மோடியின் பேச்சுக்கு பதிலடியாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் திமுகவை ஒழித்து விடுவேன் இல்லாமல் ஆக்கி விடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியை தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார். திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் என்ன ஆனார்கள் என்பது தமிழ்நாட்டுக்கு தெரியும். நான் அவரைப்போல் பேசமாட்டேன் மாறாக கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பாஜக வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *