2024 லோக்சபா தேர்தல்! குழப்பத்தில் தே மு தி க!

- Reporter 12
- 11 Mar, 2024
2024 லோக்சபா தேர்தலுக்காக கட்சிகள் தங்களது கூட்டணியை முடிவு செய்து வரும் வேலையில் தேமுதிக கட்சி கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. தொடக்கத்தில் அ தி மு க நிர்வாகிகள் கேப்டன் வீட்டுக்கு சென்று பிரேமலதா விஜயகாந்திடம் கூட்டணிக்குறித்து பேச்சுவார்த்தை தொடங்கினர். முதற் கட்டம், இரண்டாம் கட்டம் என நேரிலும் திரைமறைவிலும் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தேமுதிக, அதிமுக கூட்டணி உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பஜாகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முயற்சி செய்துவருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *