காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

- Reporter 12
- 05 Apr, 2024
2024 லோக்சபா தேர்தல் கான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளில் சில.
நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை.
மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்.
வேறு கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.
மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜகவில் சேர்ந்து குற்றவழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள், போன்றவை அந்த வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *