ரயில் நிலையத்தில் தமிழிசை!

- Reporter 12
- 16 Apr, 2024
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடையும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி வேட்பாளருக்காக ஆனால் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தென் சென்னையில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரிக்க மயிலாப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு மின்சார ரயிலுக்காக காத்திருந்த அவர் அங்கேயே திண்ணையில் அமர்ந்திருந்த செய்தி மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *