முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!!!

- Reporter 12
- 24 May, 2024
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், கேளம்பாக்கம் போலீஸாரால் சற்று முன் கைது செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசனும் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசும் தையனூரில் உள்ள பண்ணை வீட்டில் வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அவரின் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பீலாவுக்கும் ராஜேஷுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அவர்கள் விவாகரத்து கோறியுள்ளார். கடந்த மாதம் தையூரில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் பத்து அடியாட்களுடன் சென்று அங்கிருந்த காவலாளியை தாக்கி விட்டு உள்ளே சென்று பீலாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் ராஜேசுதாஸ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *