அரசியலில் இளைய தலைமுறையினருக்கு வழிவிட ரஜினிகாந்த் வலியுறுத்தல்!
- Reporter 12
- 26 Aug, 2024
சமீபத்தில் அமைச்சர் எ.வ. வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான திமுக தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரஜினிகாந்த் அவர்கள் பேசுகையில், அரசியலில் மூத்த தலைவர்கள் இளைய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என்று மறைமுகமாக கூறியிருந்தார். அவர், பள்ளிகளில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை வழிநடத்துவது சுலபம் என்றும், பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கடினம் என்றும் கூறினார். அப்பணியினை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்குப் பிறகு தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செவ்வனே செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் கலைஞரின் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர் என கிண்டல் அடித்தார். திரு ரஜினிகாந்த் அவர்கள் இளைய தலைமுறையினருக்கு வழி விடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த துரைமுருகன் அவர்கள் பல் விழுந்த பிறகும் தாடி வளர்ந்து வயதான பிறகும் சிலர் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிட்ட வில்லை என்று கோபமாக கூறினார். ஆனால் ரஜினியின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சிப் பொறுப்பில் இருக்கும் மூத்த உறுப்பினர்களும் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *