சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழைய சோறு வழங்கப்படுகிறது.
- Reporter 12
- 22 Jan, 2024
கிராமங்களிலும்,நகரங்களில் சில வீடுகளிலும் இரவு நேரங்களில் மிஞ்சும் சாதத்தை ஒரு மண் சட்டியில் தண்ணீருடன் சேர்த்து வைத்து விடுவார்கள். மறுநாள் காலையில் அத்துடன் உப்பு மற்றும் தயிருடன் சேர்த்து பழைய சோறு தனது காலை உணவாக எடுத்துக் கொள்வார்கள். இந்த பழைய சோறு எடுத்துக் கொள்வதினால் காலையில் அன்றாட வேலை செய்வதற்கு ஆரோக்கியமாக இருப்பதாக கூறுவார்கள். இந்த பழைய சோறினை உலக அளவில் ஆராய்ச்சி செய்ததில் இதில் வயிற்று புண்களை குணமாக்கும் என்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்தப் பழைய சோறினை வெளிநாடுகளில் பிரத்தியோகமாக தயார் செய்து வணிக வளாகங்களில் விற்பனை செய்கின்றனர். இப்பொழுது சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளுக்கும் பழைய சோற்றினை மருந்தாக வழங்குகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *